ஃபிங்கர் ப்ரிண்ட்: பர்சனல் ப்ரைவசிக்காக வாட்ஸ் ஆப் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

புதன், 14 ஆகஸ்ட் 2019 (10:02 IST)
வாட்ஸ் ஆப் தனது பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாக்க புதிய அப்டேட்டில் ஃபிங்கர் ப்ரிண்ட் லாக் வசதியை கொண்டு வந்துள்ளது. 
 
பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் பயனர்களின் தகவல் பரிமாற்றங்களின் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட் மூலமாக வாட்ஸ் ஆப்பிற்குள் நுழையும் வசதியை கொண்டு வரும் என இந்த ஆண்டு துவக்கத்தில் தெரிவித்திருந்தது. 
 
அதன்படி தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.221-ல் இந்த ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ளது. 
வாட்ஸ் ஆப்பில் அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு சென்று ப்ரைவசி ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் ஃபிங்கர் ப்ரிண்ட் என கொடுக்கப்பட்டுள்ள வசதியை ஆன் செய்தால் கைரேகை கேட்கும், பயனர்கல் தங்களது கைரேகையை பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்