ஒன்லி 99!! ஏர்டெல் காலை வாரிவிட்ட வோடபோன்!!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (12:58 IST)
வோடபோன் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 
 
ஆம், வோடபோன் அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ஆனது ரூ.99 மற்றும் ரூ.555 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்படும் நன்மைகள் பின்வருமாறு... 
 
ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்: 
இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 18 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. 100 எஸ்எம்எஸ்கள், 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 
 
ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்: 
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற அழைப்பு நன்மை, ZEE5 சந்தா மற்றும் வோடபோன் ப்ளே சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்