கைமாறிய ஹார்லிக்ஸ் – 31700 கோடிக்கு வாங்கியது யூனிலிவர்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:31 IST)
கிளாஸ்கோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்தின் ஊட்டச்சத்து தயாரிப்பான ஹார்லிக்ஸ் பிராண்டை ரூ.31,700 கோடி விலைகொடுத்து இங்கிலாந்தின் யூனிலிவர் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விற்பனையில் கிளாஸ்கோ நிறுவனத்தின் ஹார்லிக்ஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் தங்களது பிராண்டினை விற்பதாக அறிவித்தது. ஹார்லிக்ஸை வாங்குவதற்கு யூனிலிவர், கோகோ கோலா, நெஸ்லே ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் கடுமையானப் போட்டி நிலவியது.

இப்போது மற்றப் போட்டியாளர்களைத் தோற்கடித்து யூனிலிவர் நிறுவனம் ஹார்லிக்ஸை 31,700 கோடி ரூபாட்க்குக் கைப்பற்றியுள்ளது.  ஹார்லிக்ஸ் இந்தியாவுக்கு வந்ததே ஒரு வினோதமானக் கதை. முதல் உலகப்போரின் போது போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து போர் விரர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டது.

அதன்பின்னார் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் தனது விற்பனையை அதிகரித்து இப்போது முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஊட்டச்சத்து விறபனையில் தற்போது 43 சதவீதம் ஹார்லிக்ஸ் வசம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்