நேற்றை விட ரூ.8 விலை அதிகரித்த தங்கம்! இன்றைய நிலவரம்!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (12:12 IST)
கடந்த சில வாரங்களில் விலை உயர்ந்த தங்கம் நேற்று விலை குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.8 விலை உயர்ந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமான சூழலில் தங்கம் விலை கிடுகிடுவென ஏற தொடங்கியது. கடந்த வாரம் ரூ.32 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை ஆகி வந்தது.

தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ரூ.32,776 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று  சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.32,784 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,098 ரூபாயாக உள்ளது.

கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கள் சிறிதளவே விலை குறைந்திருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தங்கத்தின் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்