டெல்லியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது - மு.க . ஸ்டாலின்

செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (20:54 IST)
டெல்லியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது - மு.க . ஸ்டாலின்
சிஏஏக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்த நிலையில், சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கலவரம் முண்டது. இதில் , இன்று வரை 10  பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லியின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
 
கடந்த வருடம் மத்திய பாஜக அரசு இந்திய குடியரசு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அப்போது முதலாக  நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பலரும் போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில் இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடுமையாக காயம் அடைந்த அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போதுவரை சிஏஏவுக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதைத் தடுக்க வந்த காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தண்ணீரை ஊற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
 
டெல்லியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட வன்முறையில் 11 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது காவல்துறை. வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : 
 
மக்கள் பத்திரிக்கையாளர்கள் தாக்கும் அளவிற்கு டெல்லியில் வன்முறை அபாயத்தை எட்டியுள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்