இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

Siva
புதன், 27 நவம்பர் 2024 (09:39 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
 
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று நான்காவது நாளாக தொடர் ஏற்றம் கண்டிருப்பது தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியையும் தங்க நகையில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,105 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய்  56,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,610 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறத
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்