இந்தியாவில் ஸ்கைப் லைட் செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறைந்த இண்டர்நெட் வேகத்திலும் சீராக இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2ஜி கனெக்ஷன் பயன்படுத்துவோரும் வீடியோ கால், குறுந்தகவல், ஆடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்கைப் லைட் செயலியை டவுன்லோடு செய்ய முடியும். 13 எம்பி அளவு கொண்ட ஸ்கைப் லைட் செயலி மற்ற எஸ்எம்எஸ் மற்றும் கான்வெர்சேஷன்களை ஒரே டேபில் இயக்க முடியும்.
இது தவிர இதில் டயலர், காண்டாக்ட் மற்றும் பாட் உள்ளிட்ட டேப்களும் இருக்கின்றன. செயலியை டவுன்லோடு செய்ததும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது ஸ்கைப் ஐடி மூலம் செயலியை பயன்படுத்த துவங்கலாம்.
இந்நிலையில் புதிய ஸ்கைப் லைட் பதிப்பு 2ஜி கனெக்ஷனிலும் சீராக இயங்கும் என்பதால் இந்தியாவில் இந்த செயலி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.