ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

Webdunia
வியாழன், 18 மே 2017 (17:19 IST)
வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


 

 
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும்போது தவறான தகவல்கள் வழங்கியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, ஐரோப்பிய யூனியன் ரூ.773 கோடி அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில், சில தவறுகள் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அவை தெரியாமல் நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்