உலகின் காஸ்ட்லி காரின் மைலேஜ் எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (15:54 IST)
ஹைப்பர் கார்கள் தான் உலகின் காஸ்ட்லி கார்கள். இதில் கோய்னிக்செக் எனும் காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 32 கோடி ரூபாய். 


 
 
இப்போது ஸ்வெப்டெய்ல் என்னும் மாடல் கார் இதனை பின்னுக்கு தள்ளியுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மாடல்தான் இந்த ஸ்வெப்டெய்ல். 
 
1920, 1930-களில் வெளிவந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் க்ளாஸிக் டிசைனைக் கொண்டு இந்த ஸ்வெப்டெய்ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த காரின் ஒவ்வொரு பாகங்களின் டிசைனுக்கும் ஒவ்வொரு க்ளாஸிக் டிசைன் பின்புலம் உண்டு. காரின் லைட் வெயிட்டுக்காக அனைத்து பாகங்களிலும் அலுமினியம் ஃபினிஷ் கொடுத்திருக்கிறார்கள். 
 
மேலும், இது ஒரு கஸ்டமைஸ்டு கார். அதாவது, உங்கள் விருப்பப்படி என்ன கலர், எந்த மாதிரி டிசைன் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தால் நீங்கள் கேட்டபடியே உங்கள் காரை ரெடி செய்து தருவார்கள். ஆனால், இதன் மைலேஜ் லிட்டருக்கு 1 அல்லது 1.2 கி.மீ தான்.
அடுத்த கட்டுரையில்