மாருதி சுசூகி கார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை; காலை ஷிப்டு பணி நிறுத்தம்
வியாழன், 5 அக்டோபர் 2017 (15:27 IST)
அரியானா மாநிலம் மானேசரில் உள்ள கார் தொழிற்சாலைக்குள் சிறுத்தை புகுந்ததால், காலை ஷிப்டு பணி நிறுத்தப்பட்டது.
அரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலைக்குள் அதிகாலை 4 மணியளவில் ஒரு சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்போது தொழிற்சாலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. தொழிற்சாலையின் பாதுகாவலர்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
உடனே அவர்கள் சிறுத்தை தொழிற்சாலைக்குள் புகுந்ததை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். காவல்துறையினரும், வனத்துறையினரும் உடனடியாக தொழிற்சாலைக்கு வந்தனர். சிறுத்தையை தேடி பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் காலை ஷிப்டு பணி ரத்து செய்யப்பட்டது.
சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தை இருக்கும் தேடி கண்டுப்பிடித்தனர். கடைசியாக சிறுத்தை தொழிற்சாலையின் என்ஜின் பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்றும் சிறுத்தை எங்கு போனது என்று தெரியவில்லை. இதனால் சிறுத்தையை தேடி பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.