டிரம்ப் பயமுறுத்தல் வெத்துவேட்டு.. சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (09:21 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்தால் இந்திய பங்குச்சந்தை கடுமையாக சரிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், டிரம்ப்பின் மிரட்டல் வெறும் வெத்துவேட்டு அறிவிப்புதான் என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அபாரமான உயர்வை சந்தித்துள்ளன.
 
சற்றுமுன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகத்தில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 960 புள்ளிகள் உயர்ந்து, 81,552 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 315 புள்ளிகள் உயர்ந்து, 24,948 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த உயர்வு, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில், டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல்&டி, சன் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே சரிவை சந்தித்துள்ளன. மற்ற அனைத்து பங்குகளும் உச்சத்திற்கு சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது, இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்பதையும், சர்வதேச அரசியல் அழுத்தங்களுக்கு எளிதில் அடிபணியாது என்பதையும் உணர்த்துகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்