ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் துணை பிராண்டான ரியல்மி நிறுவனம் மீண்டும் தனது ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் மாடல் மீது விலை குறைத்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ராம், 4 ஜிபி ராம் என இரண்டு வெர்ஷனில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட போது 3 ஜிபி ராம் ரூ.11,999 என்றும், 4 ஜிபி ராம் ரூ.14,499 என்றும் விலை என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், இப்போது ரியல்மி யு1 3 ஜிபி ராம் ரூ.9,999 என்றும், 4 ஜிபி ராம் என்றும் ரூ.11,999 விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.