சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ தனது படைப்பான K1 ஸ்மார்ட்போன் மீதனான விலையை குறைத்துள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீதான விலை குறைப்பட்டுள்ளது. ஆம், ரூ.16,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்போன் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலை மாற்றம் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரல் புளு மற்றும் பியானோ பிளாக் என இரண்டு நிறங்களில் விற்பனையாகிறது.