அதிரடியாய் விலை குறைந்த ஒப்போ ஸ்மார்ட்போன்(ஸ்)! எவ்வளவு தெரியுமா?

வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:40 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 
 
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ஒப்போ ரெனோ 2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் மீதுதான் தற்போது விலை குறைப்பை அறிவித்துள்ளது. 
 
ஆம், ஒப்போ ரெனோ 2எஃப் மற்றும் ரெனோ 2இசட் மாடல்களின் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டு தற்போது ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் ரூ. 23,990-க்கும், ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் ரூ. 27,990-க்கும் கிடைக்கிறது. 
 
 ஏற்கனவே ஆஃப்லைன் தளங்களில் விலை குறைக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆன்லைன் தளத்தில் புதிய விலை விரைவில் மாற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்