சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்துள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. ஒப்போ, சியோமி போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research Advisory) எனும் ஆய்வு நிறுவனம் இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஒப்போ இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஒப்போ நிறுவனம் பட்டையலில் ஏழு இடங்கள் முன்னேறி இந்த ஆண்டிற்கான டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.