அம்பானி குடும்பத்து சொத்து பிரச்சனை: தம்பியிடம் இருந்து கைப்பற்ற போராடும் அண்ணன்!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (11:36 IST)
அனில் அம்பானியின் சொத்துக்களை கைப்பற்ற முகேஷ் அம்பானி கடுமையாக போராடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்திய தொலைத்தொடர்பு துறையில் நல்ல இஅடத்தை பிடித்து வைத்திடுந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஜியோ சூறாவளியில் கவிழ்ந்தது. கடன் நெருக்கடி அதிகமாகி இப்போது ஆர்காம் திவாலாகியுள்ளது. 
 
கடனை அடைக்க சொத்துக்களை விறக முற்பட்டார் அனில் அம்பானி. அந்த சொத்துக்களை கைப்பற்ற தற்போது மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறார் முகேஷ் அம்பானி. 
ஆம், அனில் அம்பானியின் சொத்துக்களை வாங்க சுமார் 10 - 12 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆர்காம் நிறுவனத்திடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு டெலிகாம் நிறுவனத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்பதால் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது.
 
எனவே, இதை தானே கைப்பற்ற வேண்டும் என முகேஷ் அம்பானி திட்டமிட்டு அதற்கேற்ப மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு  போராடி வருகிறது. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ஆர்காம் நிறுவனம் சுமார் ரூ.46000 கோடி கடனில் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்