அவர் பேசியதாவது, தேசிய கல்விக் கொள்கை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் திராவிட கழகங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள அனைத்து இயக்கங்களும் கல்விக் கொள்கை குறித்து பொய்யான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதேபோல் மும்மொழி கொள்கை என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது அல்ல. ஏற்கனவே 1986, 1992 ஆம் ஆண்டில் இருந்துள்ளது. அப்போது வராத எதிர்ப்பு இப்போது மோடி பிரதமராக உள்ளதால் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என காட்டமாக தெரிவித்துள்ளது.