ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் பணம் குறைவு!!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (13:32 IST)
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்வது குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் பணம் ரூ.8,392 கோடியாகும். ஆனால், 2006-ம் ஆண்டு காலத்தில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் பணம் ரூ.23,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
ஸ்விஸ் வங்கியில் கணக்கைத் துவங்குவதை விட சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய பகுதிகளில் வங்கி கணக்கு தொடங்குவது மிகவும் எளிதானது.
 
எனவே, தற்போது ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் செய்வதை விட சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் வங்கிகளில் தான் இந்தியர்களின் பணம் அதிகம் டெபாசிட் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்