வலைதள சேவையை நிறுத்த முடிவு: குட்பை சொல்லும் கூகுள்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (18:38 IST)
வலைதள சேவைகளை வழங்கும் கூகுள் தனது கூகுள் பிளஸ் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளது. 
 
அதாவது, மென்பொருள் டெவலப்பர்களுக்கு கூகுள் பிளஸ் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அம்பலப்படுத்திய பிழை இரண்டாவது முறையாக கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
கூகுள் பிளஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் தகவல்களில் 5.25 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதிக்கப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதேபோன்ற பிழையை கூகுள் அக்டோபர் மாதத்திலும் கண்டறிந்து தெரிவித்தது. 
இந்த பிழை பயனர்களின் ப்ரோஃபைல் விவரங்களான பயனரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, வேலை மற்றும் வயது உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்தியது. இந்த பிழையில் சுமார் ஐந்து லட்சம் அக்கவுன்ட்கள் பாதிக்கப்பட்டன.
 
இதே போன்று மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் கூகுள் பிளஸ் சேவை ஏப்ரல் 2019 வாக்கில் நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்