கூகுள் ட்ரெண்டிங்கில் கொடிகட்டி பறக்கும் சர்கார் 'கோமளவல்லி'

சனி, 10 நவம்பர் 2018 (14:59 IST)
சர்கார் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது  'கோமளவல்லி' என்ற பெயர் தான்,  சர்க்கார் படத்தில்  வரலக்ஷ்மியின்  கதாபாத்திரமாக அமைந்த அந்த பெயரை தற்போது கூகுளில் அதிகம் பேரால் தேடப்பட்டு "கோமளவல்லி"  ட்ரெண்டாகியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள சர்கார் படம் கதை திருட்டு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி இறுதியில் ஒருவழியாக எந்த பிரச்னையும் இல்லாமல் ரிலீசானது.  படம் வெளியானதை அடுத்து அதில் தமிழக ஆளும் கட்சியை குற்றம்சாட்டி சர்ச்சையான காட்சிகள் இருந்ததால் அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அக்காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 
 
அதனை தொடர்ந்து தற்போது வரலட்சுமியின்  கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லியில் 'கோமள' என்ற பெயர் மியூட் செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும், ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் இப்பெயரை சர்கார் படத்தின்  வில்லி கதாபாத்திரத்திற்கு வைத்தது தான் பெரிய தப்பு என்று அ.தி.மு.கவினர் கூறினர். 
 
இந்நிலையில், கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தானா? அந்த பெயரின் அர்த்தம் என்ன? என இது தொடர்பான பல கேள்விகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
 
இந்நிலையில் கூகுள் தேடலில் கோமளவல்லி தான் டிரெண்டிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்