விரைவில் பைலட் இல்லாத பறக்கும் கார்: எங்கே தெரியுமா??

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (10:15 IST)
உலகிலேயே அதிகமாக சுற்றுலா பயணிகள் வரும் நாடாக துபாய் உள்ளது. எனாவே, துபாய் அரசானது பறக்கும் காரை ஜுலை மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. 


 
 
துபாயில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக அந்த நாட்டு போக்குவரத்து துறை பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிலையில் பைலட் இல்லாத பறக்கு கார்களை அந்த நாட்டு போக்குவரத்து துறை சோதனை செய்துள்ளது. சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் கார்களை துபாய் போக்குவரத்து துறை சில காலங்களுக்கு முன்னர் சோதனை செய்தது.
 
இதற்கு ஹோவர் டாக்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்ததாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்