45 ஜிபி + இலவச வாய்ஸ் கால்: தீவிர போட்டிக்கு ரெடியான பிஎஸ்என்எல்!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (14:55 IST)
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் சில சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தம் 45 ஜிபி டேட்டாவினை நொடிக்கு 8 எம்பி (8Mbps) வேகத்தில் வழங்குகிறது.  
 
மேலும், வார நாட்களில் தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை இலவச வாய்ஸ் கால்களும், ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.
இந்த சலுகை பிராட்பேன்ட் பயனர்களுக்காக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், பிஎஸ்என்எல் தரப்பில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 
 
இதோடு, பயனர்களுக்கு மாதம் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் சலுகை ஆக்டிவேட் செய்யப்பட்டதில் இருந்து 180 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
 
குறிப்பு: இந்த புதிய சலுகை, பிஎஸ்என்எல் சேவையில் இணையும் புது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவோர் புதிய சலுகையை பயன்படுத்த முடியாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்