4 நாளில் மீளுமா பிஎஸ்என்எல்? ரூ.1,010 கோடி நிதி நெருக்கடி!!

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:25 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்தை கொடுக்க ரூ.850 கோடி நிதி நெருக்கடியில் உள்ளதாம். 
 
பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் உள்ளதாம். 
 
இவ்விரு நிறுவனங்களும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையில் தள்ளாடி வருகின்றன. இதனால் தங்களது ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. சுமார் ஒரு லட்சத்து 98 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தவறி விட்டன.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மாதம்தோறும் சுமார் 750 முதல் 850 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அதேபோல் எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு மாதம் 160 கோடி ரூபாய் ஊதியம் வழங்கும் நிலையில் உள்ளது. 
 
ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆக மொத்தம் ரூ.1,010 கோடியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இரு நிறுவனங்களும் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்