3 மாசத்துக்கான வட்டி கட்டித்தான் ஆகணும்! – பகீர் கிளப்பும் வங்கிகள்!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (09:55 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 3 மாதங்களுக்கு வங்கி கடன் செலுத்த தேவையில்லை என ஆர்பிஐ அறிவித்த நிலையில் வங்கிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

கொரோனா தடுப்பி நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு கட்ட வேண்டிய தவணை தொகையை 3 மாத காலத்திற்கு கட்ட வேண்டியதில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்த சூழலில் எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 3 மாதங்களுக்கு தவணை கட்டாவிட்டாலும் மூன்று மாதங்களுக்கான வட்டியை செலுத்திதான் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் வாங்கிய தவணை தொகைக்கு 3 மாத வட்டி கூடுதலாக கட்ட வேண்டிய நிலை உள்ளது. இந்த மூன்று மாத கால அவகாசத்தை ஏற்காத வாடிக்கையாளர்களுக்கு எந்த கூடுதல் வட்டியும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மூன்று மாத கால அவகாசத்தை ஏற்பதா அல்லது வழக்கம்போல தவணை செலுத்துவதா என்பதில் மக்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்