வங்கிகளின் எண்ணற்ற கிளைகளை திறந்து வைப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட கிளைகளை மட்டும் திறந்து வைக்க ஆலோசித்து வருகிறதாம்.
கொரோனா தட்டுப்பு நடவடிக்கையாக நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி பிரிவர்த்தனைகளும் நிபந்தனைக்கு உட்பட்டு நடக்கிறது. சில வங்கிகள் தங்களின் பணி நேரத்தை குறைப்பதாக அறித்துள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் பெரு நகரங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணற்ற கிளைகளுக்கு பதிலாக 5 கிமி தூரத்திற்கு ஒரு கிளையை திறந்து வைக்க ஆர்பிஐ ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
கிராமங்களில் உள்ள மக்கள் பணத்தேவைக்காக மட்டுமே வங்கியை நாடுவதால் அவர்களும் எடிஎம் சேவைகளை சிறப்பாக செய்துவிட்டு வங்கி கிளைகளை மூட ஆலோசித்து வருகிறதாம்.
மேலும், மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை எனவும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.