30 நிமிடத்தில் டோர் டெலிவரி செய்யும் அமேசான் டிரோன்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (20:28 IST)
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


 

 
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் அமேசான். மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருவதே இதன் சிறப்பு. தற்போது வாடிக்கையாளர்களுக்கு மேலும் இரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
சிறு பொருட்களுக்கு பணியாட்களை டெலிவரி செய்ய பயன்படுத்துவது தேவையற்றது என முடிவெடுத்த அமேசான், டிரோன் விமானத்தை டோர் டெலிவரிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
இந்த டிரோன் விமானம், ஒரு கிலோகிராம் வரை உள்ள பொருட்களை தூக்கிக்கொண்டு, வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்கிறது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த டிரோன் விமான சேவையின் பெயர் பெயர் Prime AIR. இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்