இந்தியா முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமேசானின் கிரேட் இந்தியன் சேல்ஸ் சிறப்பு விற்பனை திருவிழா அதிகளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் நடைபெற்று வருகின்றது.
இதில் ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை காண்போம்......
லெனோவோ இசட் 2 பிளஸ்:
அமேசான் இந்தியா தளத்தில் லெனோவோ இசட் 2 பிளஸ் கருவி ரூ.19,999க்கு கிடைக்கின்றது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 7:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7 கருவியினை பயனர்கள் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக ரூ.70,000க்கு பெற முடியும்.
மோட்டோ ஜி பிளஸ் 4th Gen:
அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கும் மோட்டோ ஜி பிளஸ் கருவியினை ரூ.13,499க்கு பெறலாம்.
ஒன்பிளஸ் 3:
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 3 கருவியினை பிரத்தியேகமாக ரூ.27,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனுடன் 12 மாதங்களுக்கான விபத்து காப்பீடு மற்றும் 12 மாதங்களுக்கான டபுள் டேட்டா சலுகை ஐடியா பயனர்களுக்கு வழங்கப்படுகின்றது.
சாம்சங் ஆன் 7 ப்ரோ:
அல்ட்ரா டேட்டா சேவிங் மோட், எஸ் பைக் மோடு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் சாம்சங் ஆன் 7 ப்ரோ கருவியினை அமேசான் தளத்தில் ரூ.9,990க்கு பெறலாம்.
ஆப்பிள் ஐபோன் 6எஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் விலை அமேசான் தளத்தில் ரூ.47,990 ஆகும். இதோடு ரூ.4,286 செலுத்தும் மாத தவணை வசதியும் வழங்கப்படுகின்றது.
சாம்சங் ஏ7:
சாம்சங் ஏ7 2016 பதிப்பினை அமேசான் தளத்தில் ரூ.26,6954 என்ற சிறப்பு விலையில் கிடைப்பதோடு மாதம் ரூ.2,384 என்ற தவணை முறையும் வழங்கப்படுகின்றது.
ஆப்பிள் ஐபோன் 6எஸ் பிளஸ்:
அமேசான் தளத்தில் ஐபோன் 6எஸ் பிளஸ் கருவி ரூ.60,999க்கு கிடைக்கின்றது. மாத தவனை வசதியும் உண்டு.
கேலக்ஸி ஏ7:
2016 Edition White 2.5D கொரில்லா கிளாஸ் 4 மற்றும் மெட்டல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஏ7 கருவியினை அமேசான் தளத்தில் ரூ.26,900 செலுத்தி பெறலாம்.