அமேசான் Great Indian Festival Sale - இன்று முதல் அமர்களமாய்!!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (09:33 IST)
அமேசான் நிறுவனம் ’கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனையானது இன்று முதல் துவங்கியுள்ளது. 

 
பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை இன்று முதல் துவங்குகிறது. ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக் 16 முதல் அக் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு அக்.15 முதலே (நேற்று) இந்த சிறப்பு விற்பனை துவங்கியது. 
 
இதற்கு போட்டியாக அமேசான் நிறுவனம் ’கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனையானது அக்டோபர் 17 ஆம் தேதி சாதாரண வாடிக்கையாளர்களுக்கு துவங்குகிறது. ஆனால், அக்டோபர் 16 ஆம் தேதி (இன்று) அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கும் சிறப்பு விற்பனை துவங்குகிறது. 
 
அமேசான் தனது சொந்த தயாரிப்புகளான அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், கிண்டில் இ-ரீடர் மற்றும் பலவற்றை 50% வரை தள்ளுபடியில் விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்