ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ்: முழு விவரம் உள்ளே...

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (15:23 IST)
ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் தற்போது ஜிஎஸ்டி ஃபைலிங்கில் உதவி செய்யும் வகையில் ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் என்ற திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.


 
 
இதன் மூலம் ஜிஎஸ்டி வரிமுறையை ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் மூலம் பைலிங் செய்து கொள்ளலாம். இதற்காக ஏர்டெல் நிறுவனம் க்ளியர் டாக்ஸ் ஜிஎஸ்டி நிறுவனத்துடனும் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளது. 
 
மேலும் பாதுகாப்பு அம்சங்களுக்காக ஏர்டெல் ஜிஎஸ்டிஎன் என்ற அமைப்புடன் பார்ட்னராக இணைந்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே ஜிஎஸ்டி ரிட்டர் செய்து தரப்படுகிறது.
 
இதோடு க்ளியர் ஜிஎஸ்டி சாப்ட்வேர் ஒன்றையும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.  
 
மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபைல்களை அப்லோடு செய்ய இலவசமாக டேட்டாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்