வரி சலுகை அளித்தால், இந்தியர்களுக்கு வேலை: பென்ஸ் நிறுவனம் பலே கன்டிஷன்!!

திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:41 IST)
ஜெர்மனியை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 


 



 
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பின்னர் சொகுசு கார்களுக்கான செஸ் வரி 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு புது கன்டிஷனுடன் பென்ஸ் நிறுவனம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.
 
அதாவது, பென்ஸ் கார்களுக்கு இந்திய அரசு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கினால், இந்தியாவில் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதோடு, இந்தியர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்