கிழிந்தது ஏர்டெல் முகத்திரை: இனி ரியல் ஆஃபர் மட்டுமே...

Webdunia
வியாழன், 17 மே 2018 (11:38 IST)
ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் போட்டி இடும் விதமாகவும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் விதமாகவும் ஏர்டெல் உண்மையான புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. 
 
ஆம், இனி ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு உண்மையான அன்லிமிட்டெட் அனுபவத்தை வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
 
ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் குறிப்பிட்ட டேட்டாவை வழங்கினாலும், அந்த நாளுக்கான டேட்டா முடிந்த பின்னரும் டேட்டா வேகம் குறைந்து செயல்படும். 
 
பிஎஸ்என்எல் டேட்டா வேகம் 128Kbps ஆக இருக்கும். சமீபத்தில்  ஜியோ டேட்டா வேகத்தை 128Kbps-ல் இருந்து 64Kbps ஆக குறைத்தது.  
 
இந்த நடைமுறையை ஏர்டெல் கொண்டுவந்துள்ளது. இதுநாள் வரை அன்லிமிடெட் சேவை என கூறினாலும், தினசரி டேட்டா முடிந்த பின்னர், மீண்டும் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. 
 
ஏர்டெல் புதிய அறிவிப்புபடி, தினசரி டேட்டா வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வழக்கமான இன்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும், கட்டணம் வசூலிக்கப்படும். 
 
புதிய சலுகையை பெற புதிதாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஏற்கனவே ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி டேட்டா வேகம் தானாக 128Kbps ஆக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்