அள்ளிக்கொடுக்கும் அம்பானிக்கு ஆப்பு வைக்கும் ஏர்டெல்!!

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (14:11 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோ ஃபைபர்-க்கு போட்டியாக ஏர்டெல் சில சலுகைகளை வழங்கியுள்ளது.

 
ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாட்டில் முகேஷ் அம்பானி சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ஜியோ ஃபைபர் குறித்த அறிவிப்புகள் மற்ற நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 
 
1. செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம், 
2. ஜியோ ஃபைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜிபி, 
3. ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் இலவசம், 
4. ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.10000 வரை சந்தா தொகை
இந்த அறிவிப்புகளால் மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை ஜியோவை மிஞ்சும் வகையில் இருக்க வேண்டுமே என்ற கலக்கத்தில் உள்ளது. ஏர்டெல் இதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
 
ஆம், ஏர்டெல் டிஜிட்டல் டிவி ககெனக்டிவிட்டிக்கு அப்டேட் செய்யப்படும் வகையில், தன்னுடைய பழைய சந்தாதாரர்களக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி செட் டாப் பாக்ஸ்-ன் முந்தைய விலை ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.1,453-க்கு விற்கப்படுகிறது. 
 
அதோடு பயனாளர்களுக்கு ரூ.1000 சலுகையையும் வழங்குகிறது. அதன்படி 150 சேனல்களை கொண்ட, செட் டாப் பாக்ஸை இப்போது ரூ.769-க்கு பெறலாம். இது கிட்டத்தட்ட ஜியோ விலைக்கு அருகில் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்