5 ஜி ஒப்பந்தம்.... ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு ?

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
சீனாவில் பிரசித்தி பெற்ற ஹவாய் என்ற செல்போன்  நிறுவனத்துடன் , 5ஜி தொழில்நுட்ப சேவைக்காக செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆக்கிய நிறுவனங்கள் வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஹவாய் நிறுவனத்தின்  உபகரணங்களை, சீனா உளவு பார்க்க பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததுடன், ஹாவாயின் தொழில்நுட்ப பொருட்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா தடை விதித்தது. அத்துடன் பிற நாடுகளும் இதை தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
 
இந்நிலையில் 5 ஜி தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இந்தியா தயாராகி வரும் நிலையில், தற்போது ஹவாய் நிறுவனத்தில் எழுத்துக்கள் புதிதாக குழப்பம் ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் 2ஜி, 3ஜி, 4ஜி ஆகிய சேவைகளை வழங்க ஹவாய் நிறுவனத்தின்  துணைப்பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றன. 
 
நம் நாட்டில் செல்போன் சேவையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவானது, தந்து 4ஜி சேவைக்கு தென் கொரியாவின் சேம்சங்கை சார்ந்துள்ளது. அடுத்ததாக 5ஜி தொழில்நுட்பம் வரவுள்ள நிலையில் அதில் ஹவாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்து நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. உளவுப் புகாரில் சிக்கியுள்ள ஹவாயுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பட்சத்தில், அதனால் தங்களுக்கு எதிர்காலத்தில் சிக்கில் வரக்கூடாது என்பதில் இந்நிறுவனம் கருதுகின்றன.
 
இப்படியிருக்கும் நிலையில், ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள், தங்களது 5ஜி சேவைக்கு நோக்கியாவையும், எரிக்சனையும் ஜியோ நிறுவனம் சாம்சங்கையுடன் கைகோர்க்கக் கூடும் என்ற தகவல் வெளியாகின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்