மோடியின் அறிவிப்பால் 3 நாட்களில் ஒரு லட்சம் ஐபோன்கள் விற்பனை

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (12:16 IST)
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் ஐபோன்கள் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அன்றாட செலவுகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் சிறு, குறு வணிகர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் பெரு முதலாளிகள் மிகவும் லாபம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஐபோன் விற்பனை மலைபோல் உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதும் உள்ல சந்தையில் ஐபோன் விற்பனையில் சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் மூன்றே நாட்களில் 1 லட்சம் ஐபோன்கள் விற்பனையாகியுள்ளது. அதுவும் இந்தியாவில் ஐபோன்கள் விலை அதிகபட்சமாக 90 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்