மோடி தன்னுடைய வங்கி கணக்கை ஒப்படைப்பாரா?- மம்தா கேள்வி

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (12:05 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து, தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை  வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் பெற்றுவருகின்றனர்.  கருப்பு பணத்தை மீட்க, கள்ள பணத்தை தடுக்க அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை என பலரும் பாராட்டினாலும், இதற்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது. பொது மக்கள் தங்கள் அன்றாடு செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
 

 

இந்நிலையில் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வங்கி பரிவர்த்தனை விபரங்களை வெளியிடுமாறு மோடி அறிவித்தார். இது குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில்,

பிரதமர் மோடி முகமது பின் துக்ளக் மன்னர் மற்றும் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் ஆகியோரையும் மிஞ்சிவிட்டார். ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். பாஜக எம்பிக்களும், எம்எல்ஏக்களும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்பிக்குமாறு மோடி கூறியுள்ளார். ஆனால் முதலில் மோடியும், அமித் ஷாவும் தங்களிடமிருந்து தொடங்க வேண்டும். அவ்வாறு செய்ய மோடி தயாரா?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்