செயல்படாத பிஎப் கணக்குகளுக்கு 8.8% வட்டி!!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (13:55 IST)
தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் 36 மாதங்கள் தொகை எதுவும் டெபாசிட் செய்யப்படாமல் இருந்தால் அது செயல்படாத கணக்காக முடிவு செய்யப்படுகிறது. 


 
 
இவ்வாறு அறிவிக்கப்படும் செயல்படாத கணக்கிற்கு 8.8 சதவீத வட்டி வழங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார். 
 
செயல்படாத பிஎப் கணக்குகளுக்கு 2011ம் ஆண்டு முதல் இதுவரை வட்டி எதுவும் வழங்கப்படாமல் உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் கேட்டுக்கொண்டபடி, இந்த கணக்குகளுக்கு வட்டி வழங்குவதன் மூலம் அவற்றை செயல்படும் கணக்காக மாற்ற முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
 
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன்பிறகு சுமார் 9.7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
அடுத்த கட்டுரையில்