வறட்சி மாநிலமாக கேரளா அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (13:23 IST)
இயற்கை எழில் நிறைந்த கேரளா மாநிலம் தற்போது வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மந்திரி சந்திரசேகரன் கேரள சட்டசபையில் தெரிவித்துள்ளார்.


 


 
இயற்கை சூழலும் அழகும் நிறைந்த மாநிலமாக கருதப்படும் கேரள மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றியது. வழக்கமாக பெய்யும் அளவை விட குறைவாக பெய்ததே வறட்சி காரணம்.
 
கேராளாவில் உள்ள 14 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக மந்திரி சந்திரசேகரன் சட்டசபையில் தெரிவித்தார். 
 
அதோடு 2 மாதங்களுக்கு தொடர் மழை பெய்தாலும் இந்த மழை குறைவை ஈடுகட்டமுடியாது என்றும் கூறினார். மேலும் மாநிலத்தின் வறட்சி நிலவரம் பற்றி அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் ஒப்படைத்து நிதிஉதவி பெறவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டுரையில்