ரத்தக் குழாயை விரிவுபடுத்தும் முளைகட்டிய பச்சைப்பயறு, நாட்டுத்தக்காளி, முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, பாகற்காய் சாப்பிட சிறந்த உணவு வகைகளாகும்.
தலைச்சுற்றல், மலச்சிக்கலுடன் கூடிய உயர் ரத்த அழுத்த நோய்க்கு பூவன் வாழைப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்லது. ஆரஞ்சு பழத்தோல் பச்சடி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தேனில் ஊறிய நெல்லிக்காய் 2 காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட தலைச்சுற்றல் நீங்கும். நல்ல பசி, பலம், புஷ்டி, மனத்தெளிவு, சுறுசுறுப்புத் தரும்.
வெந்தயக் கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட பித்தக் கிறுகிறுப்பு, வயிற்று உப்பசம், பசியின்மை ருசியின்மை நீங்கும்.
மல்லி (தனியா), சந்தனத்தூள், நெல்லி வற்றல் இம்மூன்றையும் கஷாயமாக்கி அல்லது வெந்நீரில் டீ போல் தயாரித்து சாப்பிட, பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றலும் ரத்தக் கொதிப்பும் நீங்கும்.
சீரகக் கஷாயம் தயாரித்து தேன் அல்லது நெய் சேர்த்துச் சாப்பிடுவதால் தலைச்சுற்றல், மயக்கம், நீரடைப்பு, பித்த அடைப்பால் ஏற்படும் நோய்கள் ஆகியவை விலகிவிடும்.