மாதம் இரு முறை உபவாசம் இருப்பதால் என்ன பலன்கள் தெரியுமா...?

மாதம் இரு முறை உபவாசம் இருப்பதால், நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் இருந்தால் மனது ஒரு நிலைக்கு வரும். 
 

உபவாசத்தின் முக்கிய நோக்கமே தன்னைத்தானே அகத்தாய்வு செய்து கொள்ளவும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் மனதைப் புதுப் பிக்கவும்தான். அதாவது சுருக்கமாக சொன்னால் உடலை புத்துணர்ச்சி செய்வதாகும்.
 
செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது, செல்போன் பேசுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை மாதத்தின் இரு நாள் முற்றிலும் தவிர்த்து விட்டு, மனதுக்கும் உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டும். அன்று பகவத் புராணங்கள் படிக்கலாம். அதாவது ராமாயணம் மகாபாரதம் சிவபுராணம் விநாயக புராணம் ஸ்கந்த புராணம் போன்றவை.
 
வயிறு காலியாக இருக்கும் போதுதான்  அகத்தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் முகப்பொலிவையும் இன்னும் அதிகமாக்கும். முறையான விரதத்தினால் போதுமான நீர்சத்துகள் உடலில் தங்கும். ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். 
 
வாயுத் தொல்லை, குடல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படாது. சருமம் மெருகேறும். பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கப்படும். மாதம் இரு நாள் உபவாசம் இருந்தாலே போதும். போதுமான பயிற்சி இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட உபவாசம் இருக்கலாம். எதையும் முழுமையாக உணர்ந்து செய்தால் முழு பலன் தரும். புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்