ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் பொதுவாக பல் சுத்தமாக இல்லாத பகுதியில் இருந்து தான் ஆரம்பிக்கும். பற்களுக்கு ஈறுகள் தான் பாதுகாப்பு அளித்து, எலும்போடு உங்கள் பற்கள் தாங்கி நிற்கும் ஆதரவையும் அளிக்கிறது. ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையென்றால், பல் ஆட்டம் கண்டு, பற்கள் உதிரும் அபாயம் ஏற்படலாம்.
இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். சரியாக பல் துலக்காத போது ஈறுகளில் பாக்டீரியா உருவாகி, அது பல்லில் அழற்சியை ஏற்படுத்தும். அழற்சி அல்லது ஈறுகளில் வீக்கம் ஏற்படுவது தான் ஈறுகள் சம்பந்தமான நோய்களுக்கான முதல் எச்சரிக்கை ஆகும்.
ஈறு சிவத்தல், பல் துலக்கும் போது இரத்த கசிவு, ஈறுகளின் கோடு விலகுதல், தொடர்ச்சியான சுவாச துர்நாற்றம், வாய் புண்கள் போன்றவை மற்ற அறிகுறிகளாகும்.
கொத்தமல்லி விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்க பல்கூச்சம் மறையும். கராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரத்தில் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் நீங்கும்.