வழிகாட்டி பலகை சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (16:12 IST)
வழிகாட்டிப் பலகை சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
நேற்று சென்னை ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே பேருந்து ஒன்று மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. இதன் காரணமாக பேருந்து ஆட்டோ உள்ளிட்டவைகள் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் பலியானார் என்றும் மேலும் இருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்