ஃபுட் பாய்சன் பிரச்சினைக்கு நிவாரணம் தரும் மருத்துவ குறிப்புகள் !!

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (12:40 IST)
பலருக்கு அடிக்கடி  ஃபுட் பாய்சன்  உண்டாகி வயிற்று கோளாறுகளை ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு வீட்டுக்குள் செலவில்லாத சிகிச்சை முறையுள்ளது. புட் பாய்சன் ஏற்படும்போது உடலில் உள்ள நீர் சத்து குறைந்து, சோர்வடைந்து காணப்படுவோம். எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகளவு குடித்தாலே செரிமான பிரச்சனை சரியாகும்.


ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து கொண்டு, அதை நசுக்கி வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்கும்போது தட்டி வைத்திருக்கும் இஞ்சியை அவற்றில் சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி தினமும் 2 வேளை குடித்து வந்தால்.இந்த புட் பாய்சன் பிரச்சினை தீரும்.

ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அந்த சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஃபுட் பாய்சன் என்ற பிரச்சினை பஞ்சாய் பறந்து போகும்.

தயிரின் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் ஃபுட் பாய்சன் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான வேலை செய்கிறது. வெந்தய விதைகளில் நிறைய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது தண்ணீரை உறிஞ்சி, ஃபுட் பாய்சன் ஆகாமல் இருக்க நச்சுக்களை வெளியேற்றுகிறது. வெந்தய விதைகள் ஒரு மசகு தன்மையைக் கொண்டுள்ளன, இது வயிற்று வலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்சனைக்கு துளசி  சரியான தீர்வு தருகிறது, எனவே துளசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை மிக்சியிலோ அல்லது அம்மியிலோ அரைத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அந்த துளசி பேஸ்டை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் ஃபுட் பாய்சன் பிரச்சினை காணாமல் போகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்