வாதத்தை முடக்கக்கூடிய அற்புத மூலிகை முடக்கத்தான் !!

Webdunia
முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கத்தான் எனப் பெயர் பெற்றது. 

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துசாப்பிட்டு வந்தால் நீங்கும். முடக்கற்றான் இலைகளை  எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும்.  
 
முடக்கத்தான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும்.
 
முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து,உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
 
முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய்  அளவு தினமும் உண்டுவர,சொறி , சிரங்கு,கரப்பான் , போன்ற தோல் நோய்கள் குணமாகும்.மேலும் இந்த கீரையை அரைத்து தோல்களில் பூசியும் வரலாம்.
 
முடக்கத்தான் கீரையை தொடர்ந்து,உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும். வீரைவீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின்  மிது பற்று போட விதை வீக்கம் குணமாகும். 
 
முடக்கத்தான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும். முடக்கத்தான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன்  கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்