இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவது எப்படி...?

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (18:16 IST)
சர்க்கரை நோய் என்பது ஒரு நபரின் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறைதல் அல்லது அதிகரிக்கும் நிலை. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகின்ற இன்சுலின் ஹார்மோன் சீராக சுரக்காமல் போதல் அல்லது சுரப்பதை நிறுத்துவதால் இந்நோய் ஏற்படுகிறது.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினம்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியம். கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை கட்டுபடுத்தும்.

கொய்யாக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதன் தோலை நீக்கி விட்டு சாப்பிட்டால் இரத்தத்தின் சர்க்கரை உறிஞ்சுதலை குறைக்க உதவுகிறது. குறிப்பாக காயாக சாப்பிடுவது நல்லது.

ஆவாரம்பூ சக்கரை நோய்க்கு மிக அதி மருந்தாகும். ஆவாரம்பூவை காயவைத்து அரைத்து பொடி செய்து வாரத்திற்கு ஒரு முறை வெந்நீரில் கலந்து பருகினாலே சர்க்கரை நோய் மிகவும் கட்டுக்குள் வரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்