சிஎஸ்கே அணிக்கு வரவுள்ள தமிழக பிளேயர்… உறுதியானது டிரேடிங் ஒப்பந்தம்!

vinoth

ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (11:18 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறைக் கோப்பைகள் வென்றுள்ள அணிகளில் ஒன்று சி எஸ் கே.  அந்த அணி இதுவரை ஐந்து முறைக் கோப்பை வென்று அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது. கடந்த சீசனில் அந்த அணிக்கு ருத்துராஜ் கேப்டனாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் காயம் காரணமாக அவர் பாதியிலேயே விலகியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார்.

சென்னை அணியின் அடையாளங்களில் ஒருவராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒன்பது ஆண்டுகள் கழித்து கடந்த சீசனில் மீண்டும் சென்னை அணிக்குத் தேர்வானார். ஆனால் அவர் ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதனால் இனிமேல் ஐபிஎல் தொடரில் எதிர்காலம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்த சீசனில் அஸ்வினுக்குப் பதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை வாங்க சி எஸ் கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டிரேடிங்குக்கு வாஷிங்டன் சுந்தர் தற்போது இடம்பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. குஜராத் அணியால் 3.25 கோடி ரூபாய்க்கு சுந்தர் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்