குசும்பு பிடிச்ச ஆளுப்பா இவரு! - கிரிக்கெட் வீரர்களை பெண்ணாக மாற்றிய யுவராஜ் சிங்!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (11:08 IST)
ஆண்களை பெண்களாக மாற்றும் பேஸ் ஆப் செயலி தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் நிலையில் கிரிக்கெட் வீரர்களும் இதற்கு தப்பவில்லை.

இணைய உலகத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு விதமான அப்ளிகேசன்கள் பிரபலமாக இருந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆண்கள் முகத்தை பெண்களாக மாற்றும் ‘ஃபேஸ் ஆப்’ செயலி பிரபலமாக இருந்து வருகிறது. பலரும் தங்கள் முகத்தை பெண்ணாக மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த பேஸ் ஆப் செயலி கிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் பெண்ணாக மாற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தோனி, பும்ரா என மொத்த அணியையும் பெண்ணாக மாற்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் “இதில் யாரை உங்கள் கேர்ள் பிரெண்டாக தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Who will you select as your

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த கட்டுரையில்