உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : அஸ்வினை அணியில் எடுக்காததற்கு கங்குலி விமர்சனம்

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (21:02 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான  உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், அஸ்வினை  அணியில் எடுக்காததற்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி விமர்சித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான  உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து நாட்டின்  ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில்,  ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குடித்தது முதல் இன்னிங்ஸில். அதன்பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா நேற்றைய 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் ரகானே சிறப்பாக விளையாடினார்.  அவர் 129 பந்துகளில்  89 ரன்கள் அடித்து, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ஜடேஜா 48 ரன்களும், தாகூர் 51 ரன்களும் அடித்தனர், எனவே இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்துள்ளது. இதில், இந்திய அணி 176 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

இந்த நிலையில், அஸ்வினை அணியில் எடுக்காததற்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘’புல் இருக்கும் பிட்சுகளில் ஆப் ஸ்பின் பந்துவீச்சு எடுபடாது என்று யார் கூறியது? இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேங்களில் ஒருவரான ஜடேஜாவின் விக்கெட்டை ஆப் ஸ்பின்னரான நேத்தன் லயன் வீழ்த்தியதற்கு பிட்சில் திருப்பமும் பவுன்சும் இருந்ததுதான் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்