பிரபல அரசியல் கட்சியில் இணைந்த சென்னை கிங்ஸ் முன்னாள் வீரர்

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (19:41 IST)
இந்திய கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு  முதல்வர் ஜெகன் மோகனை சந்தித்துள்ளார்.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டைன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   வென்று 5 வது முறையாக ஐபிஎல் சேம்பியன் கோப்பை வென்றது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஐபிஎல் கோப்பை வென்ற அன்று அம்பதி ராயுடு தன் ஓய்வை அவர் அறிவித்தார்.  அதில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் ஈடுபடப் போவதாக அம்பதி ராயுடு அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த மாதம் 11 ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை  சந்தித்தார்.  அதன்பின்னர், நேற்று மீண்டும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தாடேபள்ளியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அம்பதி ராயுடி கடைசியாக விளையாடிய சென்னை கிங்ஸ் அணியின் சேம்பியன் கோப்பையுடன் வந்து சந்தித்தார். எனவே, அவர் அக்கட்சியில் இணைவது உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் முறைப்படி ஒய்.எஸ்.ஆர் கட்சியில் இணைவார் என்றும் அவருக்கு முதல்வர் அக்கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்