சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

vinoth
சனி, 28 செப்டம்பர் 2024 (07:40 IST)
ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், பின்னர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் விளையாடியவர் ஆல் ரவுண்டர் டுவெய்ன் பிராவோ. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று அந்த அணியோடு பயனித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து  அவர் சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி கே கே ஆர் அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றுள்ளார். இது சி எஸ் கே அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதையடுத்து சி எஸ் கே அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட போவது யார் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் பரத் அருண், லஷ்மிபதி பாலாஜி மற்றும் மோர்னே மோர்கல் ஆகிய மூவர் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்