34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

vinoth

புதன், 13 ஆகஸ்ட் 2025 (08:15 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் பெரிதாக எந்த வெற்றியும் பெறாமல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேசிய அணி பல தொடர்களை வரிசையாக தோற்று வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரைக் கூட காண அந்நாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இது சம்மந்தமாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் இளம் வீரர்களைக் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று சாதனை படைத்துள்ளது. முதல் போட்டியைத் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த இரு போட்டிகளையும் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்